உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபாதை ஆக்கிரமிப்பு திணறும் அருணாச்சலம் சாலை

நடைபாதை ஆக்கிரமிப்பு திணறும் அருணாச்சலம் சாலை

சாலிகிராமம்:சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற, போக்குவரத்து துறை போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், 129வது வார்டு சாலிகிராமத்தில், அருணாச்சலம் சாலை உள்ளது. இச்சாலையில், சினிமா துறை ஸ்டூடியோக்கள், மாநகராட்சி வார்டு அலுவலகம், டாஸ்மாக், தனியார் மருத்துவமனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதனால், இச்சாலையில் எந்நேரமும் மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகமாக இருக்கும்.மழைக்காலத்தில் அருணாச்சலம் சாலையில் மழைநீர் தேங்குவதால், பழைய மழைநீர் வடிகால் உடைக்கப்பட்டு, புது மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது. இச்சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஆட்டோ என, பல வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன.இதனால், அருணாச்சலம் சாலையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.அதே சாலையில், தனியார் மதுக்கூடம் அருகே நடைபாதை மீது வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், பாதசாரிகள் சாலையில் நடந்து செல்லும் நிலை உள்ளது.எனவே, சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வாகனங்களை அகற்ற, போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தினமும் முறைப்படுத்தி கண்காணிக்க வேண்டும்.அதேபோல், நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை