உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விபத்தில் இறந்த ஏட்டு உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

விபத்தில் இறந்த ஏட்டு உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

போரூர், போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் வி.ஜி.என்., நகரைச் சேர்ந்தவர் குமரன், 52; போரூர் காவல் நிலையத்தில், தலைமை போலீஸ்காரராக பணிபுரிந்தார்.நேற்று முன்தினம் தாம்பரம் -- மதுரவாயல் புறவழிச்சாலை போரூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது, வேகமாக வந்த பைக் மோதி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்து ஏற்படுத்திய நபர், காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த குமரனின் உடல், பிரேத பரிசோதனை முடிந்து, உறவினர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. ஆவடி துணை கமிஷனர் ஐமான் ஜமால் நேரில் சென்று, குமரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.அதன் பின் குமரனின் உடல், அய்யப்பன்தாங்கலில் உள்ள மின்சார சுடுகாட்டில், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்