உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தானியங்கி கட்டண வசூல் தொழில்நுட்ப கோளாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்

தானியங்கி கட்டண வசூல் தொழில்நுட்ப கோளாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்

சென்னை, சென்னையில், தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிகாலை 5:00 மணி முதல் இரவு 11:30 மணி வரை, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், பயணியர் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.இதற்கிடையே, கட்டண வசூல் அமைப்பில் கோளாறு ஏற்பட்டதால், சில மெட்ரோ ரயில் நிலையங்களில், ஸ்டேடிக் 'க்யூ.ஆர்' மற்றும் வாட்ஸாப் வாயிலாக டிக்கெட் பெறும் சேவையில், கடந்த இரண்டு நாட்களில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், பயணியர் அவதிப்பட்டனர்.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தானியங்கி கட்டண வசூல் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கியூ.ஆர்., மற்றும் வாட்ஸாப் வாயிலாக டிக்கெட் பெறும் சேவையில், கடந்த 31ம் தேதி காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும், ஏப்., 1ம் தேதி காலை 11:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும் தடை ஏற்பட்டது.மெட்ரோ டிக்கெட்டுக்கு பணம் செலுத்தி, கியூ.ஆர்.,டிக்கெட் பெறாதவர்களுக்கு, பணத்தைத் திரும்ப பெறுவதற்கான நடவடிக்கை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பணம் திரும்பப் பெறாதவர்களுக்கு, இரண்டு நாளில் திரும்ப செலுத்தப்படும்.மெட்ரோ ரயிலில் தினமும் 2.60 லட்சம் பேர் முதல் 3 லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர். கடந்த மாதத்தில், 86,82,457 பேர் பயணம் செய்துள்ளனர். இது, கடந்த பிப்ரவரி மாதத்தை விட மார்ச்சில் 67,449 பேர் அதிகமாகும்.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் க்யூ.ஆர்., குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டை, 'வாட்ஸாப்' டிக்கெட் உள்ளிட்ட பயணச்சீட்டுகளுக்கு 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், பயணியர் வருகை அதிகரிக்க துவங்கி உள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில், மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை