உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமங்கலத்தில் பைக் திருட்டு

திருமங்கலத்தில் பைக் திருட்டு

திருமங்கலம்,அரும்பாக்கம் வெங்கடேஸ்வரா தெருவைச் சேர்ந்தவர் ராமராஜ், 35; பிசியோதெரபிஸ்ட். இவர், கடந்த 28ம் தேதி, திருமங்கலத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் வெளியே, தன் 'பைக்'கை நிறுத்திவிட்டுச் சென்றார். சிறுது நேரத்திற்குப் பின் வெளியே வந்து பார்த்த போது, பைக் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதையடுத்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை