உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் கம்பங்களை அலங்கரிக்கும் விளம்பரங்களால் விபத்து அபாயம் கண்டுகொள்ளாத வாரியம்

மின் கம்பங்களை அலங்கரிக்கும் விளம்பரங்களால் விபத்து அபாயம் கண்டுகொள்ளாத வாரியம்

செங்குன்றம், செங்குன்றம், புழல், மாதவரம், அம்பத்துார், ஆவடி சுற்றுவட்டாரங்களில், பல்வேறு தனியார் நிறுவனங்களின், சிறிய அளவிலான, 'ஷன்பேக்' எனப்படும், பிளாஸ்டிக் விளம்பர போர்டுகள், சாலை மின்கம்பங்களில் கட்டப்படுகிறது.அவை, கடும் வெயிலில் காய்ந்து, பலத்த காற்றடித்தால் பறந்து சாலையில் விழுகிறது.அப்படி வேகமாக பறந்து விழும் போது, வாகனங்களில் செல்வோரின் பார்வையை மறைத்து விபத்தை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. மேலும், இரு சக்கர வாகனங்களில் செல்வோரின் முகம், கழுத்து பகுதிகளில், 'பிளேடு' போல் ஆழமாக வெட்டியும், விபத்து ஏற்படும் நிலை உள்ளது.இதுபோன்ற விபத்தை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் விளம்பர போர்டுகளை கட்ட, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எந்த அனுமதியும் பெறுவதில்லை.அதை, மின் வாரியம்மற்றும் உள்ளாட்சி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. மேலும், விபத்து நடந்த பின், இதுகுறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுப்பதில்லை.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், தென்சென்னையில், அ.தி.மு.க.,வினரால் வைக்கப்பட்ட வரவேற்பு விளம்பர பேனர் விழுந்து, இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் பலியானது குறிப்பிடத்தக்கது.எனவே, விபத்து மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும், இதுபோன்ற விளம்பர போர்டுகளை சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ