உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பங்க் பெண் ஊழியர் ரூ.40,000த்துடன் ஓட்டம்

பங்க் பெண் ஊழியர் ரூ.40,000த்துடன் ஓட்டம்

புளியந்தோப்பு:பெட்ரோல் 'பங்க்'கில் வேலைக்கு சேர்ந்த அன்றே, வசூலான பணம் 40,000 ரூபாயுடன் மாயமான ஊழியர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை புளியந்தோப்பு, டாக்டர் அம்பேத்கர் கல்லுாரி சாலையில், 'சேகர் பியூல் ஸ்டேஷன்' என்ற பெயரில், பெட்ரோல் 'பங்க்' உள்ளது.இதில், அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவர், 10ம் தேதி வேலைக்கு சேர்ந்தார். மதியம் முதல் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார்.அன்றைய தினம் இரவு, பணி முடிந்த நிலையில், வசூலான தொகை 40,000 ரூபாயுடன் சாந்தி மாயமானது தெரிய வந்தது. இது குறித்து, அந்த 'பங்க்' மேலாளர் சரளா, புளியந்தோப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார், சாந்தியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி