உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ ரயில் திட்டம் புறக்கணிப்பு மத்திய அரசுக்கு கண்டனம்

மெட்ரோ ரயில் திட்டம் புறக்கணிப்பு மத்திய அரசுக்கு கண்டனம்

சென்னை, பார்லிமென்டில், மத்திய வீட்டுவசதி மற்றும் ஊரகத்துறை இணை அமைச்சர் தோக்கன் சாகு அளித்துள்ள பதிலில், 118.9 கி.மீ., துாரத்திற்கு, 63,246 கோடி ரூபாயில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட திட்டத்திற்கான அறிக்கையை தமிழக அரசு அளித்துள்ளது.இவ்வளவு அதிகமான நிதி ஒதுக்கீடுக்கு தேவையான வளங்கள் இல்லை. மாநில அரசே இதற்கான மொத்த பொறுப்பையும் ஏற்றுள்ளது' என, தெரிவித்து இருந்தார். இதற்கு மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் கணடனம் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கையில், குஜராத்தின் ஆமதாபாதிலும், உ.பி., மாநிலத்தில் நான்கு மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கியுள்ள மத்திய அரசு, தமிழகத்தை வஞ்சிப்பதை ஏற்க முடியாது.மொத்தம், 63,246 கோடி ரூபாய் மதிப்பிலான மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றும் மொத்த சுமையும் மாநில ஆட்சியின் மீதே சுமத்தப்படுவது அநீதி. மாநில அரசே அதற்காக கடன்களை பெற்று, வட்டியையும் சுமக்க நேரிடும். கடனும் வட்டியும் மிக அதிகமானால், பட்ஜெட்டின் மற்ற திட்டங்கள் பாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

panneer selvam
ஆக 10, 2024 13:03

Gopalakrishna ji , It is the agreement between Central and state government on Chennai metro phase 2 project , that State government should bear all the expenses , Central will guarantee and arrange finance from Japan JICA at concessional rate. It was agreed by Eddapadi government . Please go through these clauses in the agreement . Now you can not change since DMK has spent all the money for Freebies instead of infrastructure development . Do not blame others for your alliance partner failure .Do not misguide the people quoting other states .


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை