உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவினில் கழிவுநீர் மறுசுழற்சி பால் பாக்கெட் தயாரிப்பு நிறுத்தம்

ஆவினில் கழிவுநீர் மறுசுழற்சி பால் பாக்கெட் தயாரிப்பு நிறுத்தம்

சென்னை, சென்னையில் தினமும், 15 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து எடுத்துவரப்படும் பால், மாதவரம், சோழிங்கநல்லுார், அம்பத்துார் பால் பண்ணைகளில் பாக்கெட் செய்யப்படுகிறது.இங்கு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்படி, தொழிற்சாலை கழிவுநீரை மறுசுழற்சி செய்யும் கட்டமைப்புகள் இல்லை. எனவே, நவீன தொழிற்சாலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்த பின் உற்பத்தியை துவங்க வேண்டும் என, பல மாதங்களுக்கு முன், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு இருந்தது.உற்பத்தியை நிறுத்தினால், சென்னையில் பால் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், அதை ஆவின் நிர்வாகம் முறையாக செயல்படுத்தவில்லை. இதற்கு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடுமையாக எச்சரிக்கை விடுத்தது.இதையடுத்து, 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் நடக்கின்றன.இது மட்டுமின்றி, பால் பண்ணையின் தரைகளில் உள்ள உடைந்த டைல்ஸ் கற்களை பெயர்த்து எடுத்து, புதிதாக பதிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.இதற்கு, 80 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இப்பணிகள், 20 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதால், பால் பாக்கெட் தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.அதேநேரத்தில் கழிவுநீர் மறு சுத்திகரிப்பு நிலைய பணிகள், இரு மாதங்களுக்கு மேலாக நடக்கவுள்ளது. வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக, இப்பணியை முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ