உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நர்சிடம் செயின் பறிப்பு

நர்சிடம் செயின் பறிப்பு

சென்னை, மாதவரம், கொடுங்கையூர் முதல் பிரதான சாலையைச் சேர்ந்தவர் ரேணுகா, 41. இவர், எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, ஆர்.எம்., சாலை பெரியமேடு காவல் நிலையம் அருகே, ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது 'ெஹல்மெட்' அணிந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர், அவரது 6 சவரன் செயினை பறித்துச் சென்றார்.இது குறித்து வழக்கு பதிந்த பெரியமேடு போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து மர்மநபரை தேடி வருகின்றனர்.காவல் நிலையம் அருகே செவிலியரிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ