உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பேருந்து நிலையமான சிட்டி சாலை ஆதம்பாக்கம் பயணியர் அதிருப்தி

பேருந்து நிலையமான சிட்டி சாலை ஆதம்பாக்கம் பயணியர் அதிருப்தி

ஆதம்பாக்கம்:ஆதம்பாக்கம், சிட்டி லிங்க் சாலையில் என்.ஜி.ஓ., காலனி பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து தினசரி நுாற்றுக்கணக்கானோர், சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இது இல்லாமல் என்.ஜி.ஓ., காலனியை கடந்து செல்லும் பல மாநகர பேருந்துகள், இந்நிலையத்தை பயன்படுத்துகின்றன. அதனால், 'பீக் ஹவர்ஸ்' நேரமான காலை, மாலையில் பயணியர் கூட்டம் அதிகளவில் காணப்படும்.பல இடங்களில் இருந்து வந்து செல்லும் பேருந்துகள், என்.ஜி.ஓ., காலனி பேருந்து நிலையத்திற்குள் செல்வதில்லை. பதிலாக, சிட்டி லிங்க் சாலையிலே நிறுத்தி, பயணியரை ஏற்றி, இறக்கி செல்கின்றன. சாலையே பேருந்து நிலையமாக மாற்றப்பட்டு உள்ளதால், மற்ற வாகனங்கள் செல்வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், காலை, மாலை நேரங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவ்வப்போது விபத்துகளும் நடக்கின்றன.இப்பிரச்னைக்கு தீர்வாக, சிட்டி லிங்க் சாலையில் வரும் அனைத்து பேருந்துகளையும், என்.ஜி.ஓ., காலனி பேருந்து நிலையம் உள்ளே வந்து பயணியரை ஏற்றிச் செல்ல வழிசெய்ய வேண்டும்.இதனால், போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணப்படுவதோடு, விபத்துக்கள் நடப்பதும் தடுக்கப்படும்.சம்பந்தப்பட்ட மாநகர போக்குவரத்து கழகம், போக்குவரத்து போலீசார் ஒருங்கிணைந்து, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை