உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெங்களூரில் பஸ் விபத்தில் இறந்தவர் மனைவிக்கு இழப்பீடு

பெங்களூரில் பஸ் விபத்தில் இறந்தவர் மனைவிக்கு இழப்பீடு

சென்னை:சென்னை, கோட்டூர் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகானந்தம், 39. இவர், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார்.கடந்த 2015 டிச., 28ம் தேதி பெங்களூருவில் இருந்து மும்பைக்கு, கர்நாடக மாநில அரசு பேருந்தில் பயணம் செய்தார். கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா சிபரா கிராமம் அருகே பேருந்து சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், பலத்த காயம் அடைந்த முருகானந்தம், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, முருகானந்தத்தின் இறப்புக்கு 3 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், அவரது மனைவி யோக காயத்ரி உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான நீதிமன்ற நீதிபதி இ.சசிகலா முன் நடந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு:சயதசந்திரா சுங்கச்சாவடி அருகே பேருந்து வந்தபோது, பின்னால் வந்த சரக்கு வாகனம் பேருந்தின் வலது பக்கம் மோதியதில் விபத்து ஏற்பட்டது என்ற வாதத்தை ஏற்க போதுமான சாட்சிகள், சான்று ஆவணங்கள் இல்லை.அதிவேகம், அஜாக்கிரதையாக, பேருந்தை டிரைவர் இயக்கியதே விபத்துக்கு பிரதான காரணம். எனவே, மனுதாரர்களுக்கு 99.07 லட்சம் ரூபாய் இழப்பீடாக, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், 'நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' நிறுவனம் வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்