உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரிகளில் கிணற்று நீர் தடுக்க கோரி புகார் மனு

லாரிகளில் கிணற்று நீர் தடுக்க கோரி புகார் மனு

சேலையூர், சேலையூர் அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில், பல இடங்களில் விவசாய கிணறுகள் உள்ளன. இவற்றில் இருந்து தினமும், இரவு - பகலாக மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சி, லாரிகளில் எடுத்து சென்று விற்கின்றனர்.இதனால், இந்த ஊராட்சியில் நிலத்தடி நீர் குறைந்து, மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இப்படியே போனால், வேங்கைவாசல் ஊராட்சியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.சட்டத்திற்கு புறம்பாக, விவசாய கிணற்றில் இருந்து தண்ணீரை உறிஞ்சும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ்நாடு நிலத்தடி நீர் பாதுகாப்பு சங்கத்தினர், சேலையூர் உதவி கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை