சென்னை, சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், 13.35 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. தினமும் 107 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர், ஏரிகளில் இருந்து, 81.80 கோடி லிட்டரும், விரிவாக்க பகுதி கிணறுகளில் இருந்து, 2 கோடி லிட்டரும் மற்றும் மீஞ்சூர் மற்றும் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களில் இருந்து, 23.3 கோடி லிட்டரும் பெறப்படுகிறது. இதனால், சென்னையின் குடிநீர் தேவையை பற்றாக்குறை இல்லாமல், வாரியம் வழங்குகிறது. அதேவேளையில், ஏரிகளில் நீர் இருப்பும் குறைந்து வருகிறது.குறிப்பாக, கடந்த மாதம் 21ம் தேதியைவிட, நேற்றை நிலவரப்படி, சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி, தேர்வாய்கண்டிகை ஆகிய ஏரிகளில், நீர் குறைந்து வருகிறது.கோடை வெப்பம் அதிகரிப்பதால், இன்னும் 20 நாட்களில், கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. அதேவேளையில், கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் கைகொடுப்பதால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என, வாரிய அதிகாரிகள் கூறினர்.
ஏரிகள் நீர் இருப்பு நிலவரம் (மில்லியன் கன அடி)
ஏரி கொள்ளளவு நீர் இருப்பு ஏப்., 21 நீர் இருப்பு மே 7புழல் 3,300 2,815 2,928 சோழவரம் 1,081 200 107செம்பரம்பாக்கம் 3,645 2,472 2,209 பூண்டி 3,231 1,176 767தேர்வாய்கண்டிகை 500 397 367வீராணம் 1,465 0 0