உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலை ஆக்கிரமிப்பு இடித்து அகற்றம்

சாலை ஆக்கிரமிப்பு இடித்து அகற்றம்

மாங்காடு, மாங்காடு - மவுலிவாக்கம் சாலையில், 4 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் கால்வாய் கட்டப்படுகிறது. இப்பணிக்கு இடையூறாக, சாலையின் ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்க, நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்தனர்.முதற்கட்டமாக, மாங்காடு - பட்டூர் இடையே, 1.4 கி.மீ., துாரத்தில் உள்ள 15 கடைகள், சர்ச் முகப்பு, ஆறு குடியிருப்புகளை இடிக்க, நேற்று காலை சென்றனர்.பட்டூரில், சர்ச் முகப்பு மற்றும் அதை ஒட்டி இயங்கி வரும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் சமையல் கூடத்தை, இடிக்க முயன்றனர். அப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின், போலீசார் மற்றும் அதிகாரிகள், அவர்களிடம் பேச்சு நடத்தி, சர்ச்சின் முகப்பை இடிப்பதற்கு, அதன் நிர்வாகத்திற்கு அவகாசம் கொடுத்தனர். மற்ற ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ