உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துர்நாற்றம் வீசும் கழிப்பறை சாலிகிராமத்தில் அதிருப்தி

துர்நாற்றம் வீசும் கழிப்பறை சாலிகிராமத்தில் அதிருப்தி

சாலிகிராமம், சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், சாலிகிராமம் 129வது வார்டில் உள்ள அருணாச்சலம் சாலையில், மாநகராட்சி வார்டு அலுவலகம், எம்.எல்.ஏ., அலுவலகம் மற்றும் கவுன்சிலர் அலுவலகம் ஆகியவை அமைந்துள்ளன.இந்த அலுவலங்கள் எதிரே உள்ள மாநகராட்சி கழிப்பறை, போதிய பராமரிப்பு இல்லாமல், மோசமான நிலையில், பாழடைந்து காணப்படுகிறது. கழிப்பறையின் சுவரில் ஒட்டப்பட்டிருந்த 'போஸ்டர்'கள் கிழிக்கப்பட்ட நிலையில், அலங்கோலமாக காட்சியளிக்கிறது. அத்துடன், கழிப்பறை கதவுகள் உடைந்து உள்ளன. வாளிகளும் வைக்கப்படவில்லை.மேலும், முறையாக சுத்தம் செய்யாததால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி மற்றும் எம்.எல்.ஏ., அலுவலகம் வரும் பொதுமக்கள், வேறு வழியின்றி இந்த கழிப்பறையைத் தான் பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த கழிப்பறையை முறையாக பராமரித்து, பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக மாற்ற, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ