உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வரும் 24ல் சென்னையில் மாவட்ட கலை போட்டிகள்

வரும் 24ல் சென்னையில் மாவட்ட கலை போட்டிகள்

சென்னை, தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், சென்னை மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கலைப் போட்டிகள், வரும் 24ம் தேதி நடக்க உள்ளன.இதில் 5 முதல் 8; 9 முதல் 12; 13 முதல் 16 என, மூன்று வகை வயது பிரிவில் குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய கலைப் போட்டிகள், ராஜா அண்ணாமலைபுரம், டி.ஜி.எஸ்., தினகரன் சாலையிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லுாரி வளாகத்தில் நடக்க உள்ளன.காலை 9:00 மணிக்கு முன்பதிவு நடக்கும். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விபரங்களுடன், வயது சான்றிதழ் கொண்டுவர வேண்டும். போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 044 - 28192152 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ