உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குழந்தையை மறந்த தம்பதிக்கு டோஸ்

குழந்தையை மறந்த தம்பதிக்கு டோஸ்

திருப்போரூர், கோவளம் கடற்கரை பகுதியில், நேற்று முன்தினம் இரவு 3 வயது ஆண் குழந்தை அழுது கொண்டிருந்தது. கேளம்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.இதற்கிடையில், குரோம்பேட்டையைச் சேர்ந்த பிரியா, 30, என்ற பெண், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, 'குழந்தையை காணவில்லை' என, புகார் தெரிவித்துள்ளார். பிரியாவை வரவழைத்த போலீசார், அவர் மற்றும் அவரது கணவர் ஜோதிபாசுவிடம் விசாரித்தனர்.இருவரும் குப்பை கழிவுகளை சேகரித்து பிழைப்பு நடத்துவதாகவும்,மது அருந்தி துாங்கியதால், குழந்தையை கவனிக்கவில்லை என கூறினர். போலீசார், இருவரையும் எச்சரித்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ