உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ பணியிடத்தில் தீப்பிடித்த மின் கேபிள்

மெட்ரோ பணியிடத்தில் தீப்பிடித்த மின் கேபிள்

வளசரவாக்கம, வளசரவாக்கம் ஆற்காடு சாலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, சாலை நடுவில் தடுப்புகள் அமைத்து, துாண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தடுப்புகள் உட்புறம் மின் கேபிள்கள் அமைத்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நேற்று மதியம் வளசரவாக்கம் லட்சுமிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே, 'வெல்டிங்' செய்யக்கூடிய மின் கேபிள், திடீரென தீப்பிடித்து எரிந்து, பட்டாசு போல் வெடித்தது. இதையடுத்து, அங்கு பணியில் இருந்து மெட்ரோ ரயில் ஊழியர்கள், மண்ணைக் கொட்டியும், தீயணைப்பானை பயன்படுத்தியும் தீயை அணைத்தனர். இதனால் வெளியேறிய புகையால், வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை