உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை தகராறில் கொலை பழைய குற்றவாளி சிக்கினார்

போதை தகராறில் கொலை பழைய குற்றவாளி சிக்கினார்

கோடம்பாக்கம், கோடம்பாக்கம், பவர் ஹவுஸ் அம்பேத்கர் சிலை அருகே, கடந்த 17 ம் தேதி, தலையில் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடந்தார்.தகவலின்படி வந்த கோடம்பாக்கம் போலீசார், அந்த உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விசாரணையில் அந்த நபர், கோடம்பாக்கம் காமராஜர் காலனி, முதலாவது தெருவைச் சேர்ந்த கன்னியப்பன், 40, என தெரிந்தது. திருமணமாகாத இவர், உறவினரான அ.தி.மு.க., 134வது வார்டு வட்ட செயலர் நக்கீரன் என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.கடந்த 16ம் தேதி இரவு, மதுபான கடைக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர், பின் வீடு திரும்பவில்லை என தெரிந்தது. சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, அம்பேத்கர் சிலை அருகே இருந்து, ஒருவர் ஓடும் காட்சி பதிவாகி இருந்தது. விசாரணையில் அவர், கோடம்பாக்கம் காமராஜர் காலனியைச் சேர்ந்த மலங்கா, 21, என தெரிந்தது. இதையடுத்து, மலங்காவை போலீசார் நேற்று கைது செய்து விசாரித்தனர்.இதில், மலங்கா குட்கா, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளார். கன்னியப்பன் இவரிடம் அடிக்கடி மது அருந்த பணம் கேட்டுள்ளார். சம்பவத்தன்றும், இருவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில், கன்னியப்பனை கல்லால் தாக்கி, மலங்கா கொலை செய்தது தெரிந்தது. போதைப் பொருள் விற்பனை வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட மலங்கா, சமீபத்தில் ஜாமினில் வெளிவந்து, கோடம்பாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்து உள்ளார்.கன்னியப்பனை கொலை செய்த பின், அடுத்த நாள் காவல் நிலையம் சென்று, எதுவும் நடக்காதது போல் கையெழுத்திட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ