காசிமேடு:காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 60க்கும் குறைவான விசைப்படகுகளே நேற்று கரை திரும்பின. வஞ்சிரம், வவ்வால், சங்கரா, கானாங்கத்த, நவரை உள்ளிட்ட மீன்கள் வரத்து இருந்தது. ஆனால், குறைந்த அளவே இருந்ததால், விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால், நடுத்தர மக்கள் விரும்பிய மீன்கள்வாங்க முடியாத நிலைமை இருந்தது. அதேநேரம்விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.இது குறித்து மீனவர்கள் கூறியதாவது: 20 கிலோ கூடை கிளிச்ச மீன், 500 ரூபாய்க்கு விற்பனையாகும். ஆனால், நேற்று 1,000 ரூபாய்க்கு விற்பனையானது. கானாகத்த 20 கிலோ கூடை, 2,000 ரூபாயில் இருந்து 3,000 ரூபாயாக உயர்ந்தது. வரி ஓரா அதிகளவில் விற்பனைக்கு வந்ததால், கிலோ 250 ரூபாய்க்கு விற்பனையாகும் மீன்கள்,150 ரூபாய்க்கு விற்பனையாயின.படகில் வந்த அனைத்து மீன்களும் நேற்று விற்பனையானது. மீன்களும் நல்ல விலைக்கு விற்பனையானதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.அடுத்த வாரம் ஆக., 4ம் தேதி ஆடி அமாவாசை என்பதால், மீன்கள் அதிகளவில் விற்பனையாகாது. அதேபோல, வரும் 1ம் தேதி கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மீன்பிடி தடைக்காலம் முடிவுக்கு வருகிறது. இதனால், வரும் வாரங்களில் மீன் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினார்.
மீன் விலை நிலவரம்
மீன் வகை கிலோ (ரூ.)வஞ்சிரம் 1,000 - 1,200வெள்ளை வவ்வால் 1,200 - 1,300கறுப்பு வவ்வால் 700சங்கரா 200 - 400சீலா 500 நெத்திலி 200நவரை 150கிளிச்ச 50 - 100கானாங்கத்த 150 - 200நண்டு 250 - 500இறால் 400 - 500