உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அதிவேக குடிநீர் லாரி மோதி காவலாளி பலி

அதிவேக குடிநீர் லாரி மோதி காவலாளி பலி

செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார், பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மோகன், 56; தனியார் கல்லுாரி காவலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 'ேஹாண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலையில், சென்று கொண்டிருந்தார்.அதே சாலையில் உள்ள 'டாஸ்மாக்' கடை முன், பின்னால் அதிவேகமாக வந்த குடிநீர் லாரி, இவரது ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்ட மோகன், லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி பலியானார்.பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரான காட்டுமன்னார்குடியைச் சேர்ந்த ராமராஜன், 35, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்