உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாகன போக்குவரத்து மாற்றத்தால் செம்மஞ்சேரியில் கடும் நெரிசல்

வாகன போக்குவரத்து மாற்றத்தால் செம்மஞ்சேரியில் கடும் நெரிசல்

செம்மஞ்சேரி:ஓ.எம்.ஆர்., மற்றும் மேடவாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதனால், பல இடங்களில் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.குறிப்பாக, மேடவாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லுார் நோக்கிச் செல்லும் வாகனங்கள், நெரிசலில் சிக்குவதால், சித்தாலப்பாக்கம், நுாக்கம்பாளையம் சாலை வழியாக ஓ.எம்.ஆர்., சென்று, அங்கிருந்து இதர பகுதிகளுக்கு செல்கின்றன.இதனால், 80 அடி அகல நுாக்கம்பாளையம் சாலையில், வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, குடிநீர், கழிவுநீர் லாரிகள், பள்ளி, கல்லுாரி, ஐ.டி., ஊழியர்கள் வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. இந்த சாலையில், செம்மஞ்சேரி பாலத்தை ஒட்டி, சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையும், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் காவல் நிலைய எல்லையும் உள்ளது.இதனால், சாலை சீரமைப்பு, வாகனப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் இரு மாவட்ட அதிகாரிகள் இடையே, எல்லை நிர்ணய பிரச்னை நீண்ட நாட்களாக நீடிக்கிறது. இதன் காரணமாக, 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.குறிப்பாக, பாலத்தை ஒட்டி நான்கு மற்றும் மூன்று வழி சந்திப்புகள் அடுத்தடுத்து உள்ளதால், வாகனங்கள் 1.5 கி.மீ., துாரம் வரிசைகட்டி நிற்கின்றன.இதனால், பள்ளி, கல்லுாரி, வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமப்படுகின்றனர். அவசர சிகிக்சைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்கிக் கொள்கின்றன.வாகன ஓட்டிகள் கூறியதாவது:குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தை சீரமைக்காதது, மைய தடுப்பு அமைக்காதது நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது.இரு காவல் நிலைய எல்லைப் பகுதியானதால், யார் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது என்ற பிரச்னை உள்ளது.சில நேரம், சட்டம் -- ஒழுங்கு போலீசாரும், அவர்கள் இல்லாத போது, வாகன ஓட்டிகளும் இறங்கி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றனர். முக்கிய பகுதியாக, செம்மஞ்சேரி பாலம் சந்திப்பு உள்ளதால், போக்குவரத்து போலீசார் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ