உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எம்.எஸ்.நகர் நகர்ப்புற குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என தகவல்

எம்.எஸ்.நகர் நகர்ப்புற குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படும் என தகவல்

வால்டாக்ஸ் சாலை,சென்னை, வால்டாக்ஸ் சாலை, எம்.எஸ்.நகர் என அழைக்கப்படும் மீனாம்பாள் சிவராஜ் நகரில், 300க்கும் மேற்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில், ஆயிரக்கணக்கானோர் வசித்து வந்தனர்.இக்கட்டடத்தின் பல வீடுகளில், கூரையில் விரிசல் விழுந்தன. ஜன்னல், கழிப்பறை என, பல இடங்கள் படுமோசமான நிலையில் இருந்தன.இதையடுத்து, அபாயகரமான குடியிருப்புகளை இடித்து, புதிய கட்டடங்கள் கட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவெடுத்தது.அதன்படி, 35 கோடி ரூபாய் செலவில், தரைத்தளத்துடன் 11 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. 2020ல் கட்டுமான பணிகள் துவங்கி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு வீடும் 400 சதுரடி அளவு உடையது. இக்கட்டடத்தில் லிப்ட் வசதி, பால்கனி, மரக்கதவுகள், டைல்ஸ், நவீன கழிப்பறை வசதி ஆகியவை அமைக்கப்படுகின்றன.நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி கூறியதாவது:எம்.எஸ்.நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு குடியிருப்புகள் பணி, 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. தீயணைப்பு வசதி, மழைநீர் சேகரிப்பு வசதி, ஜெனரேட்டர் வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.குடிநீர், கழிவுநீர், மின்சாரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள, அந்தந்த வாரியங்களிடம் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஓரிரு மாதங்களில் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி