உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உடல் உறுப்பு தானத்தில் ஆர்வம்

உடல் உறுப்பு தானத்தில் ஆர்வம்

பெரம்பூர்:பெரம்பூரில் ஆர்.எஸ்.எஸ்., --- எச்.எஸ்.எஸ்., ரத்ததான இயக்கமும், ஸ்ரீ ஓம் ஆதி சக்தி யேந்திர சுவாமிகள் டிரஸ்ட், அவலுார் மற்றும் சென்னை மாவட்ட ஜன கல்யாண் அமைப்பும் இணைந்து, உடல் உறுப்பு தானம் மற்றும் ரத்த தானம் முகாமினை பெரம்பூர் விவேகானந்த வித்யாலயா பள்ளி வளாகத்தில் நேற்று நடத்தினர். இதில், ரத்ததானம் செய்ய முன் வந்த 110 பேரில், 63 பேர் ரத்த தானம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இலவச கண் அறுவை சிகிச்சை முகாம், கண் தானம் மற்றும் உறுப்புகள் தானம் முகாமும் நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 21 பேர் கண்தானம் வழங்கினர்; 25 பேர் உடல் உறுப்பு தானம் வழங்கினர். கண் பரிசோதனை செய்த 140 பேரில், ஐந்து பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட உள்ளது. தானம் வழங்க வந்தவர்கள் கூறுகையில், 'ரத்தம், கண் மற்றும் உடல் உறுப்பு தானம் வழங்குவதில் மக்களுக்கு விழிப்புணர்வு உள்ளது. இத்தகைய முகாம்களை மக்கள் அறியும்படி செய்தால் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். 'தானம் வழங்க மக்கள் ஆர்வமாக இருந்தாலும், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்ற குறைபாடுகளால் தானம் வழங்க முடியாத நிலையும் உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை