உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காரணீஸ்வரர் கோவிலுக்கு ரூ.38 லட்சத்தில் தேர்நிலை

காரணீஸ்வரர் கோவிலுக்கு ரூ.38 லட்சத்தில் தேர்நிலை

சென்னை, காரணீஸ்வரர் கோவில் தேரை நிறுத்த, 38 லட்சம் ரூபாய் செலவில், புதிய தேர்நிலை கட்டப்படுகிறது.சென்னை, சைதாப்பேட்டையில் காரணீஸ்வர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவத்தில், தேர் திருவிழா விமரிசையாக நடத்தப்படும்.இக்கோவிலுக்குச் சொந்தமான தேர் நிலை பழுதடைந்தது. அதை அகற்றிவிட்டு, மரத்தேரை பாதுகாக்கும் வகையில், 38 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் நிலை அமைக்க, நிர்வாக அனுமதி பெறப்பட்டது.இதையடுத்து, பொது ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் பணிகளை முடித்து, புதிய நிலையில் மரத்தேர் நிறுத்தப்படும் என, கோவில் செயல் அலுவலர் ரமணி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை