செம்மஞ்சேரி, மயிலாப்பூரைச் சேர்ந்தவர் அருண்குமார், 21, அவினேஷ், 22. சட்டக்கல்லுாரி மாணவர்களான இருவரும், நேற்று முன்தினம் 'ஹோண்டா' காரில் ஓ.எம்.ஆரில் இருந்து இ.சி.ஆர்., நோக்கி புறப்பட்டனர்.சோழிங்கநல்லுார், டி.என்.எச்.பி., சாலையில் ஒரே திசையில் எதிரே வந்த 'ஸ்விப்ட்' கார் மோதியது. இதில் அந்த காரில் லேசான சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். பின், காரில் இருந்த நான்கு பேர், சட்டக்கல்லுாரி மாணவர்களை அடித்து, அவர்கள் காரிலே வலுக்கட்டாயமாக ஏற்றி, கேளம்பாக்கம் கொண்டு சென்றனர். பின், இரண்டு பேரின் செயினை அடகு வைத்து 30,000 ரூபாய் பறித்தனர்.மாணவர்களின் புகாரையடுத்து, கழிப்பட்டூர் ஜனார்த்தனன், 23, கணேஷ், 24, முகமது இப்ராஹீம், 22, சுனில், 22, ஆகியோரை, செம்மஞ்சேரி போலீசார் கைது செய்தனர்.