உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு சென்னையில் 39 லட்சத்து 1,167 பேர்

வாக்காளர் இறுதி பட்டியல் வெளியீடு சென்னையில் 39 லட்சத்து 1,167 பேர்

சென்னை, சென்னை மாவட்டத்தில் 39 லட்சத்து 1,167 வாக்காளர்கள் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். கடந்தாண்டு 18 வயது பூர்த்தியடைந்த, 37,442 பேர் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், 2024ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ராதாகிருஷ்ணன், நேற்று வெளியிட்டார்.பின், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:கடந்த 1ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் மேற்கொள்ளும் பணிகள், கடந்த 2023 அக்., 27ம் தேதி முதல், டிச., 12ம் தேதி வரை நடந்தன.பின், வாக்காளர் பதிவு அலுவலர்களால் படிவங்கள் ஏற்பு அல்லது நிராகரிப்பு செய்யப்பட்டு, ஒருங்கிணைந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.அந்த வகையில், 2023 அக்., 27ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 38 லட்சத்து 68 ஆயிரத்து 178 பேர் இடம் பெற்றிருந்தனர். சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக, 69,079 பேர் விண்ணப்பித்த நிலையில், 68,823 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.வாக்காளர் பட்டியல்களில் பெயர் நீக்கம் செய்யக்கோரி 49,482 பேர் விண்ணப்பித்த நிலையில், 35,834 பேர் பட்டியலில் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில், 469 பேர் உயிரிழந்துள்ளனர்.அந்த வகையில், இறுதி வாக்காளர் பட்டியலில் 39 லட்சத்து 1,167 பேர் உள்ளனர். சென்னையில் அதிகபட்ச வாக்காளர்கள் வேளச்சேரி தொகுதியிலும், குறைந்தபட்ச வாக்காளர்கள் துறைமுகம் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளனர்.வரைவு வாக்காளர் பட்டியலை விட, கூடுதலாக 32,989 பேர், இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இது, 0.85 சதவீதம் அதிகம். அதேநேரம், 2023ம் ஆண்டில், 18 வயதை பூர்த்தி செய்த, 37,442 பேர், புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.இந்த வாக்காளர் பட்டியலை, சம்பந்தப்பட்ட பதிவு அலுவலர், சென்னை மாநகராட்சி, உதவி ஆணையர் அலுவலகங்கள், ஓட்டுச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம். மேலும், www.election.tn.gov.inஎன்ற இணையதளத்திலும் பார்வையிடலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

கொளத்துாருக்கு

அதிக முக்கியத்துவம்அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன், வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அப்போது, கொளத்துார் தொகுதியில் மட்டும், அதிகம் பெயர் நீக்கம், சேர்த்தல் உள்ளது. முதல்வர் தொகுதி என்பதால், கொளத்துாரில் மட்டுமே பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்ற தொகுதிகளிலும், அதேபோல் பணிகள் நடைபெறாதது ஏன் என, அரசியல் கட்சியினர் கேள்வி எழுப்பினர். அதற்கு, அதிகாரிகள் பதிலளிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை