உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடபழனி பஸ் நிலையத்தில் பாலுாட்டும் அறைக்கு பூட்டு

வடபழனி பஸ் நிலையத்தில் பாலுாட்டும் அறைக்கு பூட்டு

வடபழனி:வடபழனி பேருந்து நிலையத்தில் உள்ள பாலுாட்டும் அறை மூடிக் கிடப்பதால், குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் பெண்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். வடபழனி ஆற்காடு சாலையில், வடபழனி பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து வேளச்சேரி, போரூர், குன்றத்துார், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட இடங்களுக்கு தினமும், 200க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 1,000க்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர்.இவர்களில் கைக்குழந்தையோடு வரும் தாய்மார்களும் உள்ளனர். சென்னையில் பெண்களின் நலன் கருதி, குழந்தைகளுக்கு பாலுாட்டும் வகையில், பேருந்து நிலையங்களில் தனி அறை திறக்கப்பட்டது. அந்த வகையில், வடபழனி பேருந்து நிலையத்தில் திறக்கப்பட்ட பாலுாட்டும் அறை, தற்போது மூடிக் கிடக்கிறது.இதனால், பேருந்து நிலையத்திற்கு வரும் பெண்கள், தங்களது குழந்தைக்கு பால் கொடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, பேருந்து நிலையத்தில் உள்ள பாலுாட்டும் அறையை நாள்தோறும் திறப்பதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ