உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கார்கோ நிறுவனத்தில் லாரி ஓட்டுனர் மர்ம மரணம்

கார்கோ நிறுவனத்தில் லாரி ஓட்டுனர் மர்ம மரணம்

பூந்தமல்லி, சென்னை, எர்ணாவூர் முருகப்பா நகரைச் சேர்ந்தவர் எழில்ராஜ்,28. இவர், பூந்தமல்லியில் உள்ள தனியார் கார்கோ நிறுவனத்தில், லாரி ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.இந்நிறுவனத்தின் உள்ளே நேற்று முன்தினம் இரவு லாரியை இயக்கிய போது, அதே லாரியில் சிக்கி பலத்த காயமடைந்து, எழில்ராஜ் இறந்ததாக கூறப்படுகிறது.தகவலின்படி சம்பவ இடத்திற்குச் சென்ற பூந்தமல்லி போலீசார், எழில்ராஜ் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவர் இறந்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ