உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்ஸ்டா காதலனுக்கு திருமணம் இரு குழந்தைகளின் தாய் தற்கொலை

இன்ஸ்டா காதலனுக்கு திருமணம் இரு குழந்தைகளின் தாய் தற்கொலை

தண்டையார்பேட்டை, கொடுங்கையூர், எழில் நகரைச் சேர்ந்தவர் நந்தினி, 28. இருவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவரது கணவர் கார்த்திக், கருத்து வேறுபாடு காரணமாக, ஆறு ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்றார்.தனியாக வசித்த நந்தினிக்கு, நான்கு ஆண்டுகளுக்கு முன் 'இன்ஸ்டாகிராம்' வலைதளம் வாயிலாக, மணிகண்டன் என்பவர் அறிமுகமானார். இருவருக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது.இதையறிந்த மணிகண்டன் குடும்பத்தினர், அவருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க விறுவிறுப்பாக பெண் பார்க்க துவங்கினர். இதையடுத்து மணிகண்டன், நந்தினியுடன் பேசுவதை தவிர்த்துள்ளார்.நந்தினி பலமுறை மொபைல் போனில் பேச முயற்சித்தும், அவர் போனை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த நந்தினி, நேற்று மணிகண்டன் வேலை செய்யும், தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் தெருவில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்கு வந்துள்ளார். 'போன் செய்தால் ஏன் எடுக்கவில்லை' எனக் கேட்டுள்ளார்.இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நந்தினி, கடைக்கு வெளியே சென்று, பையில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து, தன் உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.இதில், பலத்த காயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றினர். அங்கு சிகிச்சை பலனின்றி நந்தினி உயிரிழந்தார்.இது குறித்து விசாரித்த தண்டையார்பேட்டை போலீசார், தற்கொலைக்கு துாண்டியதாக பிராட்வே, அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்டன், 24, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ