உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டி ரயில் நிலையத்தில் புதிய கூரைகள் பொருத்தம்

கிண்டி ரயில் நிலையத்தில் புதிய கூரைகள் பொருத்தம்

சென்னை:சென்னை ரயில் கோட்டத்தில், அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ், பெரம்பூர், அம்பத்துார், பரங்கிமலை, கிண்டி உட்பட 15 ரயில் நிலையங்களில், மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில், கிண்டி ரயில் நிலையத்தில் 13.50 கோடி ரூபாய் செலவிலான பணிகள் நடந்து வருகின்றன.புதிய டிக்கெட் முன்பதிவு அலுவலகம், பயணிருக்கான நகரும் படிக்கட்டுகள், நடைமேம்பாலம், மின்துாக்கி,  'சிசிடிவி' கேமரா, உணவகங்கள், கூரைகள் சீரமைப்பு, வாகன நிறுத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.தற்போது, 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. வரும் செப்., மாதத்திற்குள் பணி முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என, சென்னை ரயில் கோட்டம் நேற்று தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ