சென்னை, லோக்சபா தேர்தல் பொது பார்வையாளர்களை தினமும் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சந்திக்கும் இடம் மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் விபரம்:வடசென்னை லோக்சபா தொகுதியில் உள்ள, திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர், கொளத்துார், திரு.வி.க.நகர் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு, தேர்தல் பொது பார்வையாளராக கார்த்திகே தன்ஜி புத்தப்பாட்டி நியமிக்கப்பட்டுள்ளார். அவரது மொபைல்போன் எண் 94459 10953. இவரை, சென்னை சேப்பாக்கம், வாலாஜா சாலையில் உள்ள புதிய அரசு விருந்தினர் மாளிகையில், மாலை 4:00 முதல் 5:00 மணி வரை சந்திக்கலாம்.மத்திய சென்னை லோக்சபா தொகுதியில், வில்லிவாக்கம், எழும்பூர், அண்ணாநகர், துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு சட்டசபை தொகுதிக்கு தேர்தல் பொது பார்வையாளராக டி.சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது மொபைல் எண் 94459 10956. இவரை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில், காலை 11:30 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரை சந்திக்கலாம்.தென்சென்னை லோக்சபா தொகுதியில், விருகம்பாக்கம், தி.நகர், மயிலாப்பூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் பொது பார்வையாளராக முத்தாடா ரவிச்சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். அவரது மொபைல் எண் 94459 10957. இவரை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில், காலை 11:00 முதல் 12:00 மணி வரை தினசரி சந்தித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தேர்தல் தொடர்பான தங்களது புகார் மற்றும் கோரிக்கை மனுவை அளிக்கலாம்.