உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கார் மோதியதில் பாலத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி

கார் மோதியதில் பாலத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி

மதுராந்தகம், செய்யூர் அருகே உள்ள இரண்யசித்தி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார், 30. 'ஸ்விப்ட்' காரில் மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் மீது, அதிவேகமாக சென்று கொண்டிருந்தார். தனியார் நிறுவன பணியாளர்களை ஏற்றி சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்று, எதிர் திசையில் வந்த டி.வி.எஸ்., ஸ்கூட்டி வாகனம் மீது மோதினார்.இதில், ஸ்கூட்டியில் வந்த வில்வராயநல்லுார் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம், 58, 30 அடி உயரமான பாலத்திலிருந்து விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்து, அதே இடத்திலே உயிரிழந்தார். உடன் வந்த சுமன், காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள்ளார். மதுராந்தகம் போலீசார், கார் ஓட்டிவந்த அஜித்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை