உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகாலட்சுமி நகருக்கு கிரய பத்திரம் கோரி மனு

மகாலட்சுமி நகருக்கு கிரய பத்திரம் கோரி மனு

திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டு, எர்ணாவூர் - மகாலட்சுமி நகரில், 120 வீட்டுமனைகள் உள்ளன. இவை, தற்போது, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் எனும் குடிசை மாற்று வாரிய நில வகைப்பாடு ஆகும். வீட்டுமனை ஒதுக்கீடு பெற்றவர்கள், தொகையினை தவணை முறையில் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மகாலட்சுமி நகருக்கு கிரய பத்திரம் கோரி, குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், தண்டையார்பேட்டை, கோட்டம் - 1ல் அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது. இதில், மகாலட்சுமி நகர் தலைவர் கதிர்வேல், பொருளாளர் குப்பன், ராஜேந்திரன், துரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை