உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பட்டா வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி

பட்டா வாங்கி தருவதாக ரூ.15 லட்சம் மோசடி

அசோக் நகர், சென்னை, அசோக் நகர் 32வது தெருவைச் சேர்ந்தவர் சோபனா, 45. இவருக்கு சொந்தமான இடம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளது.அந்த இடத்திற்கு பட்டா வாங்கித் தருவதாகக் கூறி, சோபனாவை அணுகிய மோகன்குமார், அறிவழகன், சரவணன் ஆகிய மூன்று பேர், இதுவரை 15 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளனர். ஆனால், பட்டா வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்ட அவர்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அசோக் நகர் காவல் நிலையத்தில், சோபனா நேற்று புகார் அளித்துள்ளார்.இதையடுத்து, மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த அசோக் நகர் போலீசார், மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி