உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 564 பேரிடம் ரூ.45 கோடி மோசடி: இயக்குனர்கள் கைது

564 பேரிடம் ரூ.45 கோடி மோசடி: இயக்குனர்கள் கைது

சென்னை, அதிக வட்டி தருவதாக, 45 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் இவரை பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை புரசைவாக்கத்தில், 'புரசைவாக்கம் சந்ததா சங்க நிதி லிமிடெட்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதன் இயக்குனர்களாக, சென்னையைச் சேர்ந்த மோகன், சுப்பிரமணியன், வெங்கட்ராமன் ஆகியோர் செயல்பட்டு வந்தனர். இவர்கள், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாகவும், சீட்டு பணத்திற்கான முதிர்ச்சி காலம் முடிந்தும் பணத்தை திரும்பத் தராமல், 45 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து, சென்னை அசோக் நகரில் உள்ள, பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில், 564 பேர் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோகன், சுப்பிரமணியன் ஆகியோரை நேற்று கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி