உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செஸ் போட்டியில் ரஷ்யா வீரர் முன்னிலை

செஸ் போட்டியில் ரஷ்யா வீரர் முன்னிலை

சென்னை, தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், ஐ.எம்., நார்ம் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டியை, சென்னையில் நடத்தி வருகிறது.இந்திய வீரர்களுக்கு சர்வதேச மாஸ்டராக அங்கீகாரம் கிடைப்பதற்காக நடத்தப்படும் இப்போட்டி, நான்காம் கட்டமாக போரூரில் நேற்று முன்தினம் துவங்கியது. போட்டியில், ரஷ்யாவில் இருந்து இருவர், ஸ்லோவாக்கியா, மங்கோலியா, துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு வீரர், தமிழகத்தைச் சேர்ந்த நால்வர், மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் என, மொத்தம் 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். நேற்று மதியம், இரண்டாம் சுற்றுகள் நிறைவடைந்தன. அதில், ரஷ்யாவின் டேவிட் 2 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.தொடர்ந்து, ஸ்லோவாக்கியாவின் மாணிக் மிகுலாஸ் மற்றும் தமிழகத்தின் ராகவ் ஆகியோர் தலா 1.5 புள்ளிகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளனர். ரஷ்யாவின் அலெக்சாண்டர், தமிழத்தின் கல்யாணி, குணால், ஜெய்வீரர் ஆகியோர் தலா 1 புள்ளியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை