உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டி சிட்கோவில் டாஸ்மாக் கடைக்கு சீல்

கிண்டி சிட்கோவில் டாஸ்மாக் கடைக்கு சீல்

சென்னை,கிண்டி தொழிற்பேட்டை வளாகம் 404 ஏக்கர் பரப்பு உடையது. இங்கு, உற்பத்தி தொழில் சார்ந்த நிறுவனங்கள் துவங்க, அரசு இடம் ஒதுக்கியது. அரசு மற்றும் தனியார் என, 500க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் உள்ளன. எந்த வகையான வணிகம் சார்ந்த கடைகள், உணவகங்கள் துவங்க அனுமதி இல்லை.இந்நிலையில், 2022ல் இங்குள்ள ஒரு கட்டடத்தில் 'டாஸ்மாக்' கடை திறக்கப்பட்டது. இதனால், உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டது.'சிட்கோ' நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை மீறி, டாஸ்மாக் கடை திறந்ததால், தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடக்கிறது. இந்நிலையில் நேற்று, விதிமீறி நடத்திய டாஸ்மாக் கடைக்கு, போலீஸ் பாதுகாப்புடன், சிட்கோ அதிகாரிகள், 'சீல்' வைத்தனர். அதேபோல், வணிகம் சார்ந்து நடத்தப்பட்ட உணவகம் உள்ளிட்ட சில கடைகளுக்கும், அதிகாரிகள் சீல் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை