மேலும் செய்திகள்
ஆவடியில் 4 இன்ஸ்., இடமாற்றம்
4 hour(s) ago
செய்திகள் சில வரிகளில்
4 hour(s) ago
ஏரியில் மூழ்கி ஒருவர் பலி
4 hour(s) ago
மதுரவாயல், பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் தினேஷ் குமார், 30; தரமணியிலுள்ள தனியார் நிறுவனத்தில் சர்வீஸ் இன்ஜினியராக பணியாற்றினார்.இவர் நேற்று முன்தினம், மதுரவாயல் அடுத்த வானகரத்திலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், கழிவுநீரை சுத்திகரித்து மறு உபயோகப்படுத்தும் நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொண்டார். நேற்று முன்தினம் இரவு, பணிகளை முடித்து விட்டதாக தன் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். அதே அலுவலகத்தில் பணிபுரியும் தமீன் என்பவர் வந்து பார்த்த போது, தினேஷ் குமார் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று அதிகாலை, சிகிச்சை பலனின்றி தினேஷ் குமார் உயிரிழந்தார். விஷ வாயு தாக்கி இறந்தாரா, வேறு ஏதேனும் காரணமா என, மதுரவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago