உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிறுவனர் கோப்பை வென்ற எஸ்.ஆர்.எம்., ஒயிட்ஸ் அணி

நிறுவனர் கோப்பை வென்ற எஸ்.ஆர்.எம்., ஒயிட்ஸ் அணி

சென்னை, எஸ்.ஆர்.எம்., பல்கலை சார்பில், கல்லுாரியின் நிறுவனர் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள பல் மருத்துவமனை வளாகத்தில் நடந்தது.மொத்தம் 16 அணிகள், நாக் அவுட் மற்றும் சூப்பர் நாக் அவுட் முறையில் நடந்தன. நேற்று நடந்த இறுதி போட்டியில், எஸ்.ஆர்.எம்., ஒயிட்ஸ் மற்றும் ஜேப்பியார் பல்கலை அணிகள் மோதின.'டாஸ்' வென்ற எஸ்.ஆர்.எம்., அணி, முதலில் பேட்டிங் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழந்து, 210 ரன்களை அடித்தது.அணியின் வீரர் சஞ்சீவ் குமார், 38 பந்துகளில் 8 சிக்சர், ஆறு பவுண்டரி என, 86 ரன்களும், மற்றொரு வீரர் அமீத் சத்வீக், 34 பந்துகளில் மூன்று சிக்சர், 11 பவுண்டரி என, 74 ரன்களும் அடித்தனர்.அடுத்து களமிறங்கிய, ஜேப்பியார் அணி, 20 ஓவர்களுக்கு முழுமையாக விளையாடி, ஆறு விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது.இதனால், 17 ரன்கள் வித்தியாசத்தில், எஸ்.ஆர்.எம்., ஒயிட்ஸ் அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை வென்றது.வெற்றி பெற்ற அணிகளுக்கு எஸ்.ஆர்.எம்., பல்கலையின் விளையாட்டு துறை இயக்குனர் மோகனகிருஷ்ணன் கோப்பையை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ