சென்னை, நெல்லை நண்பர்கள் கைப்பந்து கழகம் சார்பில், மறைந்த முன்னாள் நிர்வாகிகளான ஜான் மற்றும் சித்திரை பாண்டியன் நினைவு கோப்பைக்கான, மாநில அளவிலான வாலிபால் போட்டி எழும்பூரில் நடக்கிறது.ஆண்கள் பிரிவில், ஐ.ஓ.பி., - இந்தியன் வங்கி, எஸ்.ஆர்.எம்., - வருமான வரி, கலால் வரி, தமிழக போலீஸ் உள்ளிட்ட எட்டு அணிகளும், பெண்கள் பிரிவில் ஐ.சி.எப்., - தெற்கு ரயில்வே உட்பட ஆறு அணிகளும் பங்கேற்றன.பெண்கள் பிரிவில் அனைத்து போட்டிகளின் முடிவில், தெற்கு ரயில்வே மற்றும் சென்னை ஐ.சி.எப்., அணிகள் மோதின. அதில், 24 - 26, 25 - 20, 19 - 25, 25 - 22, 15 - 12 என்ற செட் கணக்கில், தெற்கு ரயில்வே அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை வென்றது. மூன்றாம் இடத்திற்கான போட்டியில், எஸ்.ஆர்.எம்., அணி, 25 - 20, 25 - 14 என்ற செட் கணக்கில், தமிழக போலீஸ் அணியை தோற்கடித்தது. போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை, மாநில வாலிபால் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் அர்ஜுன் துரை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் வழங்கினர்.