உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூவம் பாலத்தில் போடப்பட்ட இரும்பு தடுப்புகளால் அவதி

கூவம் பாலத்தில் போடப்பட்ட இரும்பு தடுப்புகளால் அவதி

சூளைமேடு, கூவம் பாலத்தில், நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள தடுப்புகளால், பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். சூளைமேடு நெடுஞ்சாலையில், நமச்சிவாயபுரம் அருகில், கூவம் பாலம் செல்கிறது. இந்த பாலத்தைக் கடந்து தான் சேத்துப்பட்டு, கெனால் சாலை, ஹாரிங்டன் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல முடியும். இவ்வழியாக தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மேம்பாலத்தின் நடைபாதையில், இரும்புத் தடுப்புகளை சாய்த்து வைத்து உள்ளனர்.இதனால், நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகள், சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது. இதன் காரணமாக, பாதசாரிகள் விபத்தில் சிக்கவும் வாய்ப்புள்ளது. சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை போலீசார் இதைக் கண்காணித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை