உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அசோக் நகரில் 19 மாடி வணிக வளாகம் கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கின

அசோக் நகரில் 19 மாடி வணிக வளாகம் கட்டுமான பணிகள் மீண்டும் துவங்கின

சென்னை, சென்னை அசோக் நகரில் வீட்டுவசதி வாரியம் சார்பில் கடட்டப்படும், 19 மாடி வணிக வளாகத்துக்கான கட்டுமான பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளுடன் சிறிய அளவிலான வணிக மற்றும் அலுவலக வளாகங்களையும் வீட்டுவசதி வாரியம் கட்டியது. இந்த வளாகங்கள் மிக பழையதாகி விட்டன. எனவே, இந்த வளாகங்களை இடித்துவிட்டு, அதிக தளங்களுடன் அடுக்குமாடி வணிக வளாகங்கள் கட்ட வீட்டுவசதி வாரியம் முடிவு செய்தது. இந்த வகையில் அசோக் நகர் அசோக் பில்லர் அருகில், வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான, நிலத்தில் பழைய வணிக மற்றும் அலுவலக வளாகம் இருந்தது. இந்த கட்டடங்களை இடித்துவிட்டு, அடுக்குமாடி வளாகம் கட்ட, கடந்த ஆட்சிக்காலத்தில் திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. இதற்கான 'டெண்டர்' விடப்பட்ட போது வெளிப்புற வடிவமைப்பு மாறியதால் கட்டுமான செலவை இறுதி செய்வதில் பிரச்னை உருவானது. இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பின் வடிவமைப்பு தொடர்பான மாற்றங்கள் செய்யப்பட்டு அதற்கான செலவும் டெண்டர் தொகையில் சேர்க்கப்பட்டது. இதன் அடிப்படையில், 2022ல் அடுக்குமாடி வணிக வளாக கட்டுமான பணிகள் துவங்கின. இதன்படி, இங்கு இரட்டை கோபுர வடிவில், 19 மாடிகள் கொண்டதாக ஆடம்பர வீடுகள், வணிக மற்றும் அலுவலக வளாகம் கட்டப்படுகிறது. ஒவ்வொரு வீடும், 1,700 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஒப்பந்ததாரர் தொடர்பான சில பிரச்னைகளால் இங்கு கட்டுமான பணிகள் தொய்வடைந்து இருந்தன. தற்போது இந்த பணிகள் மீண்டும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட உள்ளதாக வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பாண்டு இறுதிக்குள் இப்பணிகளை முடிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை