| ADDED : ஆக 03, 2024 12:19 AM
குமரன் நகர், ஜாபர்கான்பேட்டை, காசி தியேட்டர் அருகே வழக்கம்போல அப்பகுதி மக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது, அடையாறு ஆற்று பாலத்தில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.குமரன் நகர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.இதில், கொலை செய்யப்பட்டது எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. கடந்த 31ம் தேதி இரவு, அவரது நண்பரான திருவண்ணாமலை மாவட்டம், மேல்பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த குமரேசன், 21, என்பவரும், அடையாறு ஆற்று பகுதியில் மது அருந்தி உள்ளனர்.மதுபோதையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறில், குமரேசன் அருகே இருந்த மரக்கட்டையால் சிறுவனை தாக்கி கொலை செய்து தப்பியது தெரிய வந்தது. குமரேசனை நேற்று போலீசார் கைது செய்தனர்.