உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் கைது

பணம் கேட்டு மிரட்டிய ரவுடிகள் கைது

படப்பை, தாம்பரம் அருகே சோமங்கலம் அடுத்த நல்லுார் பகுதியை சேர்ந்தவர்கள் நவமணி, 29, மனோஜ், 21. ரவுடிகளான இருவர் மீதும் கொலை, பணம் கேட்டு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் சோமங்கலம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று முன்தினம் நல்லுாரில் உள்ள பழைய இரும்பு கடைக்கு சென்ற ரவுடிகள் இருவரும், பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து சோமங்கலம் காவல் நிலத்தில் புகார் அளிக்கப்பட்டது. ரவுடிகள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ