உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமியை அடைத்து வைத்து அத்துமீறியவர் சிக்கினார்

சிறுமியை அடைத்து வைத்து அத்துமீறியவர் சிக்கினார்

எம்.ஜி.ஆர்., நகர், தி.நகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி, கடந்த மாதம் 27ம் தேதி பள்ளிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.இது குறித்து எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில், மாயமான சிறுமி கொருக்குப்பேட்டையில் உள்ள வீடு ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த போலீசார் சிறுமியை பத்திரமாக மீட்டனர். விசாரணையில், கொருக்குப்பேட்டை, ஜீவா நகர் 13வது தெருவைச் சேர்ந்த ராஜபாண்டி, 27, என்பவர் சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அசோக் நகர் மகளிர் போலீசார், ராஜா பாண்டியை 'போக்சோ' சட்டத்தில் நேற்று கைது செய்தனர்.அதேபோல, ஊர்க்காவல் படைப் பிரிவில் கார் ஓட்டுனராக பணி புரிந்த எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த ரமேஷ், 39, என்பவர், தன்னை போலீஸ் எனக்கூறி, அடிக்கடி சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.இதையடுத்து, போலீசார் ரமேைஷயும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை