சென்னை, பெரும்பாக்கம் கல்லுாரி சாலையில், 2.16 லட்சம் சதுர அடி பரப்பு கொண்ட இடம், அரசு மருத்துவமனை கட்ட ஒதுக்கப்பட்டது. இதில், 1 லட்சம் சதுர அடி பரப்பில், 51 கோடி ரூபாயில், 6 மாடியில், 262 படுக்கை வசதியுடன் மருத்துவமனை கட்டப்படுகிறது.ஒவ்வொரு மாடியும், 16,714 சதுர அடி பரப்பில் அமைகிறது. அறுவை சிகிச்சை, அவசர பிரிவு, பொது பிரிவு, டயாலிசிஸ் உள்ளிட்ட பிரிவுகளில், 262 படுக்கை வசதிகள் அமைய உள்ளன.ரத்த பரிசோதனை, எக்ஸ்-ரே, ஸ்கேன், மருந்து சேமிப்பு அறை, அலுவலகம், ஆவண காப்பகம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைகிறது. தற்போது, 75 சதவீதம் பணி முடிந்துள்ளது.பருவமழையில் அதிக வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதியானதால், 3 அடி உயரத்தில் தரைமட்டம் உயர்த்தப்படுகிறது. மேலும், 7 அடி உயரத்தில் சுற்றுச்சுவர், தெருவிளக்கு, உள்பகுதியில் சாலை அமைக்கப்பட உள்ளது.இதற்கு, 22 கோடி ரூபாய் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது.இந்த நிதி, ஜூன் மாதம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு மாதங்களில் அனைத்து பணிகளையும் முடிக்கும் வகையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.