மேலும் செய்திகள்
நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் கொள்ளுப்பேரனுக்கு விருது
3 hour(s) ago
பனகல் பூங்கா - போட் கிளப் மெட்ரோ சுரங்க பணி துவக்கம்
3 hour(s) ago
கவிஞர் அருணாச்சலம் கவிதை நுால் வெளியீடு
3 hour(s) ago
மண்ணடி, சென்னை, ஏழுகிணறு, பெரியண்ணா முதலி தெருவை சேர்ந்தவர் நவாஸ்கான், 65. இவர் ஈவினிங் பஜாரில் உள்ள மொபைல் போன் விற்பனை கடையில் வேலை செய்கிறார். ஆக., 3ம் தேதி இரவு, கடையின் வசூல் பணம் 50 லட்சம் ரூபாயுடன், இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்ற நவாஸ்கானை, மண்ணடியில், இரண்டு பைக்குகளில் வந்த ஐந்து பேர் கும்பல் வழிமறித்தது. நவாஸ்கானை தாக்கி, 50 லட்சம் ரூபாய் பையை பறித்துக்கொண்டு தப்பினர்.இது குறித்து விசாரித்த, வடக்கு கடற்கரை போலீசார், செங்குன்றத்தை சேர்ந்த நாகராஜ், 34, தீபக், 24, சரண்குமார், 22 ஆகிய மூவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கில், செங்குன்றத்தை சேர்ந்த கார்த்திக், 31 என்பவர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். தலைமறைவானவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago