உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எஸ்.ஐ., உட்பட மூவர் சஸ்பெண்ட்

எஸ்.ஐ., உட்பட மூவர் சஸ்பெண்ட்

சென்னை, ஜூலை 24-சாலை விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார், சில இடங்களில், கையூட்டு பெற்று விதிமீறலில் ஈடுபடுவோரை விட்டு விடுகின்றனர். நேற்று முன்தினம் வேப்பேரி போக்குவரத்து பிரிவு எஸ்.ஐ., ராமசாமி, காவலர் ரமேஷ், ரகுராமன் ஆகியோர் வாகன தணிக்கையின்போது மஞ்சப் பையில் கையூட்டு பணத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த வீடியோ கூடுதல் கமிஷனர் சுதாகர் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து வடக்கு மண்டல இணை கமிஷனர் தேவராணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று மூவரையும் இணை கமிஷனர் 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை