உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போண்டாவில் பல்லி பெண்ணுக்கு சிகிச்சை

போண்டாவில் பல்லி பெண்ணுக்கு சிகிச்சை

பட்டினப்பாக்கம், பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் ரூபா, 35. இவர், நேற்று முன்தினம் இரவு, லாசரஸ் சர்ச் சாலையில் உள்ள 'பகவான்' டீக்கடையில் போண்டா வாங்கி சாப்பிட்டுள்ளார்.அப்போது, இறந்த நிலையில் பல்லி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர், தன் அண்ணன் சதீஷுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பின், இது குறித்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.சமீபமாக, பிரபல ஹோட்டல்கள் முதல் சாலையோர சிறு உணவகங்களில், உணவில் பல்லி, எலி, புழுக்கள், கரப்பான் பூச்சிகள் கிடப்பது, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, உணவின் தரம் உள்ளிட்டவற்றில் கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை